ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பதுக்க சதி..!! கொரோனாவை விட வெறிபிடித்து அலையும் பதுக்கல் கும்பல்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2020, 3:00 PM IST
Highlights

அதேபோல் இந்த மருந்தை மற்றவர்களுக்கு விற்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளதாகவும்  கூறப்படுகிறது 

கொரோனா வைரசுக்கு நோய் தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள நிலையில்  தற்போது அந்த மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . மலேரியா எதிர்ப்பு மருந்தானா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டில் இல்லாத நிலையில் அதை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்ததுள்ளது.   முன்னதாக அமெரிக்க அதிபரும் இதே தகவலை வெளியிட்டிருந்தார் .  

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதிலிருந்து இந்த மருந்தை பதுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.  இது குறித்து கள ஆய்வு நடத்தியுள்ளார் ஒரு தனியார் செய்தி நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த மருந்து  வேதியல் கூடங்களிலும் கையிருப்பில் இல்லை என தெரிவித்துள்ளது .  அதேபோல் இந்த மருந்தை பல மருத்துவர்கள்  மற்றும் மெடிக்கல் ரெப்புகள் ,  அதிக அளவில் கேட்டு ஆர்டர் செய்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என தடை விதித்துள்ளது .  இது இன்னும் சில வாரங்களில் நாட்டு மக்களுக்கு  தேவைப்படும் என்பதால்  அதிரடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .  அதேபோல் இந்த மருந்தை மற்றவர்களுக்கு விற்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளதாகவும்  கூறப்படுகிறது . 

இம்மருந்தை  பொதுவாக  சாமானியமாக எல்லோருக்கும் வழங்க கூடாது,  என்ற தெரிவித்துள்ள நிலையில்,  டெல்லி மும்பை போன்ற நகரங்களில் மக்கள் இந்த மருந்தை தேடி படை எடுப்பதாகவும் ஊடக ஆய்வில் தெரியவந்துள்ளது .  15 நாட்களுக்கு  தேவையான மருந்து வெறும் நூறு ரூபாய்க்கு வாங்க முடியும் என்பதே அதற்கு மற்றொரு காரணம் என்கின்றர்.   அதேபோல் அவசியம் இல்லாதவர்கள் இந்த மருந்தை உட்கொள்ள கூடாது ,  மருந்துவ தேவையின்றி  உட்கொள்பவர்களுக்கு மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் எச்சரித்துள்ளது .  மருத்துவ பரிந்துரையின்றி  இதை உட்கொள்வதன் மூலம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் மேலும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதில் மோசமான ஆபத்தை ஏறபடுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் வழிகாட்டுதல் இன்றி யாரும் இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.  

 

click me!