
நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான கார் விபத்தில் நந்தமுரி ஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தார். நர்கேட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா உயிரிழந்தார்.முன்னாள் எம்.பி.,யான இவர் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்டிஆர்.,ன் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் ஆவார்.
இந்நிலையில் சீரியஸாக இருந்த நடிகர் ஹரிகிருஷ்ணாவிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதை செல்பி எடுத்துள்ளனர்.
மேலும் அந்த செல்பி படத்தை மருத்துவமனை ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த செல்பி போட்டோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.*