தமிழச்சியின் கணவர் என்னை கைது செய்தார்.. திருமண நிகழ்ச்சியில் சொல்லிக் காட்டிய ஸ்டாலின்.. ஆடிப்போன உ.பிக்கள்

Published : Mar 09, 2022, 05:52 PM ISTUpdated : Mar 09, 2022, 07:33 PM IST
தமிழச்சியின் கணவர் என்னை கைது செய்தார்..  திருமண நிகழ்ச்சியில் சொல்லிக் காட்டிய ஸ்டாலின்.. ஆடிப்போன உ.பிக்கள்

சுருக்கம்

தமிழச்சி தங்கபாண்டியனின் மகளுக்கும் திமுக தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரனின் மகனுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தலைமை ஏற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடத்தி வைத்தார்.  

அதிமுக ஆட்சியில் கோவைக்கு சென்ற தன்னை கைது செய்தவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கணவர் சந்திரசேகர் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசியது மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதை சந்திரசேகர் மறந்தாலும் நான் மறக்கவில்லை என்றும் முதல்வர் கூறியதை கேட்டு பலரும் கைதட்டி ரசித்தனர்.

தமிழச்சியின் கணவர் IPS அதிகாரி;

திமுக எம்.பி கவிஞர் கனிமொழியின் உற்ற தோழியாகவும், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகவும் வலம் வருபவர் தமிழச்சி தங்கபாண்டியன். பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பரதநாட்டியக் கலைஞர், நாடக கலைஞர், பாடகி, அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகளாவார். இவரின் சகோதரர் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு. படித்து பட்டம் பெற்று சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான திரு சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர்களுக்கு சரயு,  நித்திலா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொறியியல் பட்டமும், இளைய மகள் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளனர்.

மகேந்திரனின் சம்பந்தியானார் தமிழச்சி தங்கபாண்டியன்:

பல்வேறு கவிதை கட்டுரை புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் மகளுக்கும் திமுக தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரனின் மகனுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தலைமை ஏற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சுமதி என்ற பெயரை தமிழச்சி தங்கபாண்டியன் என மாற்றியது குறித்தும், அவரது கணவர் தன்னை கைது செய்த விவரங்கள் உள்ளிட்டவைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டாலினை கைது செய்த தமிழச்சியின் கணவர்: 

தான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் கொடியேற்ற செல்ல இருந்தபோது தன்னை எங்கு அனுமதிக்கக்கூடாது என அதிமுகவினர் பிரச்சினை செய்ததாகவும், அப்போது காவல்துறையினர் தன்னை அனுமதிக்க மறுத்து வந்ததாகவும், ஆனால் நான் அங்கு சென்றே தீருவேன் என தான் கூறி சென்றபோது தன்னை தடுத்து கைது செய்தவர் தான் காவல்துறை அதிகாரி, தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகர் என முதலமைச்சர் கூறினார். அந்த சம்பவத்தை அவர் மறந்திருக்க மாட்டார், நான் நிச்சயம் மறக்கவே மாட்டேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அப்போது திருமண நிகழ்ச்சியில் இருந்த பலரும் அதை கைதட்டி ரசித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பிளாஸ்பேக் பேச்சு திருமண நிகழ்ச்சியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!