அம்மாடியோவ் .. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை  அச்சடிக்க என்ன செலவு தெரியுமா?

First Published Dec 19, 2017, 10:22 PM IST
Highlights
how much the expenses for print the new 500 and 2000 rupees


உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை திருப்பப்பெற்றபின் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க 4,968 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 1,293.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கள்ளநோட்டுக்கள் மற்றும் கறுப்புப்பணத்தை  ஒழிக்கும் வகையில் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

அதே நேரத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமல்லாமல் புதிய 200 ரூபாய் நோட்டுக்களும் அச்சிடப்பட்டன..



இந்நிலையில் நாடாளுமன்றத்தில இது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதில் அளித்துள்ளார்.

அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் பின்னர் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்றும் . இதற்காக 4,968.84 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று  365.4 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 1,293.6 கோடி செலவிடப்பட்டது என்றும் 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப்பின், 7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர் என்றும் பொன்னார் பதிலில் கூறப்பட்டுள்ளது.

 

click me!