திகாரில் இப்ப வசதி எப்படி..? ரஜினியை விமர்சித்த ஜோதிமணிக்கு திடுக் பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 15, 2020, 11:45 AM IST
Highlights

‘’நான் வசதியான எம்.பி அல்ல. சம்பளம் மட்டுமே. அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000- 10,000 கொடுக்கிறேன். எம்.பி.,க்கு விமானத்தில் பிஸினஸ் வகுப்பு உண்டு. 

கோடிஸ்வரர்களின் சொத்துக்கெல்லாம் வரி போடறாங்க. அதை எதிர்த்து நீதிமன்றம் போனால் அங்கே  எச்சரிச்சு அனுப்பறாங்க. சிஸ்டம் சரியில்லை என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, ரஜினி திருமண மண்டபத்திற்கு வரி கட்டாததற்கு விமர்சனம் தெரிவித்து இருந்தார்.

நான் வசதியான MP அல்ல. சம்பளம் மட்டுமே.
அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000- 10,000 கொடுக்கிறேன்.
MP க்கு விமானத்தில் பிஸினஸ்வகுப்பு உண்டு.ஆனால் எளிய மக்கள் பயன்படுத்தும் எகானமி வகுப்பையே பயன்படுத்துகிறேன்.தொகுதிபணி தவிர எதற்கும் MP கோட்டாவை பயன்படுத்துவதில்லை. https://t.co/v9lX1Ip1Cp

— Jothimani (@jothims)

 

அதற்கு கேள்வி எழுப்பிய ஒருவர், ‘’நீங்க வசதியானவர் தானே. எங்க சொல்லுங்க உங்களுக்குஎம்.பி கோட்டாவில் கிடைக்க கூடிய ஒரு சலுகையாவது வேண்டாம் என சொல்லி இருப்பீர்களா..? சொல்லமாட்டீங்க. ஏன் என்றால் அது உங்கள் உரிமை. அது மாதிரி தான் இது உழைத்து சாப்பிடுபவரின் உரிமை. திகாரில் இப்ப வசதி எப்படி என போய் நண்பர்களிடம் சொல்லுங்கள்’என கூறி இருந்தார்.
 

அதற்கு பதிலளித்துள்ள ஜோதிமணி, ‘’நான் வசதியான எம்.பி அல்ல. சம்பளம் மட்டுமே. அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000- 10,000 கொடுக்கிறேன். எம்.பி.,க்கு விமானத்தில் பிஸினஸ் வகுப்பு உண்டு. ஆனால், எளிய மக்கள் பயன்படுத்தும் எகானமி வகுப்பையே பயன்படுத்துகிறேன். தொகுதிபணி தவிர எதற்கும் எம்.பி கோட்டாவை பயன்படுத்துவதில்லை’’எனக் கூறியுள்ளார். 
 

click me!