பள்ளி மாணவர்கள் மனதில் கூட எவ்வளவு கொடூரமான பாலியல் வக்கிரம்.. கொதிக்கும் எம்.பி.ஜோதிமணி..!

Published : Mar 23, 2022, 11:47 AM IST
பள்ளி மாணவர்கள் மனதில் கூட எவ்வளவு கொடூரமான பாலியல் வக்கிரம்.. கொதிக்கும் எம்.பி.ஜோதிமணி..!

சுருக்கம்

விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் 4 பேர் பள்ளி மாணவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.

பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

விருதுநகரில் இளம்பெண்ணை காதலிப்பாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது என ஜோதிமணி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் 4 பேர் பள்ளி மாணவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.

பள்ளி மாணவர்கள் மனதில் கூட, கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபடும் அளவிற்கு பாலியல் வக்கிரம் புரையோடிக் கிடக்கிறது. பெண்ணை வெறும் உடலாக, காமப்பொருளாக மட்டும் பார்க்கும் மன நிலையிலிருந்தே இம்மாதிரியான கொடும் குற்றங்கள் உருவாகின்றன.

கடுமையான சட்ட நடவடிக்கைகளோடு, கல்வித்திட்டத்திலும் பெண்களை சமமாக, அறிவுத்தளத்தில் அணுகுவது பற்றிய உரையாடல் நிகழும் விதமாக மாற்றங்கள் தேவை. அப்பொழுதுதான் இம்மாதிரியான பாலியல் வக்கிரங்களை, வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!