கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. நெருக்கடியில் சிக்க நேரிடும் என மருத்துவர்கள் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2021, 10:37 AM IST
Highlights

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது ரெம்டெசிவர் தட்டுப்பாட்டுக்கு பதுக்கலே காரணம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ மனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டுவதால் சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் திணறி வருகின்றனர். முதல் அலையின் போது 58 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2வது அலையில் அதன் எண்ணிக்கை  80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் பரபரக்கின்றன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது  மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. நோயாளிகள் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டினால் சிகிச்சை அளிக்கப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது ரெம்டெசிவர் தட்டுப்பாட்டுக்கு பதுக்கலே காரணம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் வீடுகளில் சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.அரசு விரைந்து செயல் பட வேண்டும் இல்லை என்றால் நிலைமை மோசமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

 

click me!