அனைத்து சனி - ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2020, 5:02 PM IST
Highlights

2020ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி ஜனவரி மாதம் 1ம் தேதி ஆங்கிலப்புத்தாண்டு, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16 உழவர் திருநாள், 26 குடியரசு தினம். ஏப்ரல் 1ம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, 2ம் தேதி புனிதவெள்ளி 13ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு, 25ம் தேதி மகாவீர் ஜெயந்தி.

மே மாதம் - மே1-ம் தேதி மே தினம், 14ம் தேதி ரம்ஜான், ஜூலை மாதம் 21ம் ம் தேதி பக்ரீத், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்,  20ம் தேதி மொகரம் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி,  

செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, 14ம் தேதி ஆயுத பூஜை, 15ம் தேதி விஜயதசமி, 19ம் தேதி மிலாதுன் நபி.  நவம்பர் 04ம் தேதி தீபாவளி, டிசம்பர் 25ம் தேதி கிருஸ்துமஸ். தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுபோக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சனி ஞாயிறு விடுமுறை என தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். 

click me!