ஹிஜாப் மட்டும் போதாது.. வளர்ச்சி பணிகளையும் பாருங்க.. முதல்வருக்கு கிளாஸ் எடுத்த பாஜக தலைமை.??

Published : Apr 09, 2022, 06:03 PM IST
ஹிஜாப் மட்டும் போதாது.. வளர்ச்சி பணிகளையும் பாருங்க.. முதல்வருக்கு கிளாஸ் எடுத்த பாஜக தலைமை.??

சுருக்கம்

சமீபத்தில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று, பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தார். ஹிஜாப், ஹலால் மற்றும் மசூதிகளில் ஒலிபெருக்கி போன்ற பிரச்சனைகளில் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. 

கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தேவையென கட்சி மேலிடம் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மேலிடம் இவ்வாறு அறிவுரை வழங்கியுதாகவும் கூறப்படுகிறது.

வட இந்தியாவைப் பொருத்தவரையில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருந்து வருகிறது. ஆனால் தென் இந்தியாவில் அக்காட்சி கால் பதிக்க பகிரத முயற்சிகளை எடுத்தாலும் அதில் பெரிய அளவிற்கு பலன் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதை வைத்த அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு என நுழையலாம் என நீண்ட கால திட்டம் வைத்து செயல்பட்டு வருகிறது. அதற்கு கர்நாடகத்தில் உள்ள ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ள பாஜக  கர்நாடகத்தில் எதிர்வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முனைப்பில்  தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் உத்திர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களை போல் கர்நாடகத்திலும் இந்துத்துவா கருத்துக்கள் தீவிரமாக பரப்பி வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துள்ளது . ஹிஜாப் அணியத் தடை, ஹலால் இறைச்சிக்கு தடை என அடுத்தடுத்த வியூகங்களை பாஜக கையில் எடுத்து வருகிறது. ஹிஜாப், அலால் போன்ற சிறுபான்மையினரை சார்ந்த வியூகம், இந்துத்துவ வாக்கு வங்கியை சிறிது உயர்த்தினாலும் அதை வைத்து மட்டுமே தேர்தலில் வெற்றியை அறுவடை செய்துவிட முடியாது என்றும்,  எனவே மக்கள் சார்ந்த மற்றும் மாநில அரசின்  வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதால் மட்டுமே  மீண்டும் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியும் எனவும்  பாஜக மேலிடம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்று, பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தார். ஹிஜாப், ஹலால் மற்றும் மசூதிகளில் ஒலிபெருக்கி போன்ற பிரச்சனைகளில் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது. இந்த பயணத்தின் போது கர்நாடகத்தில் கட்சி நிலவரம் குறித்து மேலிட தலைவர்களிடம் பசவராஜ் பொம்மை எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.  தீவிர இந்துத்துவா கருத்துக்கள் ஓரளவுக்கு இந்துத்துவா வாக்குகளை உயர்த்தியிருந்தாலும்,  பட்ஜெட்டில் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் விவசாயிகளின் அதிருப்தியை கலையும் விதமான நீர்ப்பாசன திட்டங்கள் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பசவராஜ் பொம்மைக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

எத்தனை இந்துத்துவா கருத்துக்களை பேசி அதன் மூலம் வாக்கு வங்கியை உயர்த்தினாலும், மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளால் மட்டுமே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற உதவும் என பிரதமர் உறுதியாக நம்புவதாகவும், மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியைக் கொண்டே தேர்தலை எதிர்கொள்வதில் பிரதமர் உறுதியாக இருப்பதாகவும் பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். அதேநேரத்தில் கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் புனரமைத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்களை ஏற்பாடு செய்து பிரதமர் கர்நாடகாவுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வன கர்நாடகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கட்சி நிர்வாகிகளை மாற்றி கட்சியை புனரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், வட கர்நாடக பகுதியில் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் வேறு சில கட்சிகளில் அவர்கள் இணைய உள்ளதாக கட்சிக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொம்மையிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!