
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பில் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி தனது நண்பர் என்ற வகையில் அதனை சிறப்பாகத் திறந்து வைத்து சென்னை மெரினாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை காமராஜர் சாலை சந்திப்பில் சிலையை நிறுவினார். அந்த சிலையில் பீடத்தில் கீழ் சிலை திறப்பாளர் என்ற வகையில் கருணாநிதியின் பெயரும் பொறிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டு, அது அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற தீர்ப்பானது. இதை அடுத்து, சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, சிவாஜின் கணேசனுக்காக சென்னை அடையாறு ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிவாஜி கணேசன் சிலை சிவாஜி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிவாஜி சிலையின் பீடத்தில் முன்னர் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டு, புதிதாக பீடத்தின் மேல் வைக்கப்பட்டது.
இதை அடுத்து, தமிழக அரசின் இந்தச் செயலை எதிர்த்து கண்டனக் குரல்கள் எழுந்தன. கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்தோடு திமுக தலைவர் கருணாநிதி பெயர் அகற்றபட்டுள்ளது என்று கூறி,
எனவே மீண்டும் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையின் கீழ் கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி,
ரவிசந்திர பாபு, இது குறித்து
தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.