பாகுபலி திரைப்படத்தின் காட்சியை கண் முன் நிறுத்திய நீதிமன்ற தீர்ப்பு!!!

First Published Aug 8, 2018, 11:27 AM IST
Highlights

அந்த தீர்ப்பில், "கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நேற்று மாலை கலைஞர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து அவருடைய உடல் தற்பொழுது ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலிற்கு திரைத்துறையை சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நேற்று தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில்  அடக்கம் செய்ய அனுமதியை மறுத்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து திமுக வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது. அந்த தீர்ப்பில், "கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த தீர்ப்பினை தொடர்ந்து அங்கு குழுமியிருந்த தலைவர்கள் அனைவரும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் இந்த வெற்றியை "இறப்பிற்கு பின்பும் போராடி வென்ற கலைஞர்" என்று அரங்கம் அதிர கத்தி தங்களுடைய துக்கம் கலந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அரங்கம் அதிர்ந்த அந்த காட்சி பாகுபலி திரைப்படத்தின் பாகுபலி தளபதியாக பொறுப்பேற்கும் காட்சியை கண் முன் நிறுத்தியது.

தன்னுடைய 80  வயது பொது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் போராட்டங்களுடனே கடந்த மக்களின் தலைவன் கலைஞர் கருணாநிதி இன்று அவருடைய "உடன் பிறப்புகளை" விட்டு தன்னுடைய அன்னாரின் அருகே இளைப்பாற செல்கின்றார்.

click me!