இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு சுவாசப் பாதையில் கிருமிகள் உருவானதில் பாதிப்பும், அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள காய்ச்சல் தவிர எந்தப் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- அரசியல் வேறு; ஆன்மீகம் வேறு! பொறுப்பு வாய்ந்த பிரதமர் அவதூறு செய்தியை சொல்வது சரியா? தர்மமா? முதல்வர் பதிலடி
அவருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், முத்தரசனுக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கும் படி அறிவுறுத்தினர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் உடல்நிலை தொடர்பாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தொடர்ந்து இருந்த விக்கல், வாந்தி காரணமாக (03.10.2023) திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பாதையில் கிருமிகள் உருவானதில் பாதிப்பும், அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள காய்ச்சல் தவிர எந்தப் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து வரும் இருமலும், விக்கலும் மருத்துவ சிகிச்சையால் தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பேசும் போது இருமல் ஏற்படுகிறது. அவர் இரண்டொரு நாள் பேசாமல் சுவாசப் பாதைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மிகக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். தோழர்கள், நண்பர்கள் மருத்துவ மனைக்கு நேரில் செல்வதையும். அவரிடம் நலம் விசாரித்து விட வேண்டும் என முயற்சிப்பதையும் தவிர்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இதையும் படிங்க;- கூட்டணியில் இருந்து போறவங்க போகட்டும்.. அதை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.. அண்ணாமலை.!
(04.10.2023) காலை முதல் பார்வையாளர்கள் தொடர்ந்து வந்து சென்றது சிகிச்சையின் முழுப் பலனையும் பெற முடியாமல் தடுத்துள்ளது என்பதை மருத்துவர்கள் எடுத்துக் கூறி பார்வையாளர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என கறாராக தெரிவித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருச்சி எம். செல்வராஜ் மருத்துவமனை நிர்வாகத்துடனும், மருத்துவர்களுடனும் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வருகிறார் இரா. முத்தரசன் அவர்களின் வாழ்விணையர் உடன் இருக்கிறார். அவருக்கு தேவையான சிகிச்சை முழு மன நிறைவுடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒத்துழையுங்கள். அமைதியும், ஓய்வும் அவரது சிகிச்சையின் ஒரு பகுதி என்பதை புரிந்து ஆதரியுங்கள் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.