ஹலோ நான் பி.எம். மோடி பேசுறேன்... நெகிழ்ந்துபோன மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Aug 4, 2020, 1:43 PM IST
Highlights

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி உரையாடி உள்ளார்.
 

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி உரையாடி உள்ளார்.
 
மருத்துவப் படிப்புகளில் OBC வகுப்பினருக்கு 50% சதவீத இடஒதுக்கீடு கோரி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு சலுகையை வழங்க சட்டரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இதுகுறித்து மத்திய அரசு 100 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து நேற்று பிரதமரிடம் தொலைபேசியில் உரையாடியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

.

இதுதொடர்பான தனது ட்விட்டர் பதிவில் “ ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதியதை தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியிடம் இதுகுறித்து பெசினேன். இதற்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களின் இடஒதுக்கீடு உரிமைகளை பாதுகாக்கவும் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!