தமிழகத்தில் 29ம் தேதி மிக மிக அதிக அளவு கனமழை... வானிலை மையம் கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Oct 26, 2021, 12:40 PM IST
Highlights

உயிர் காக்கும் கருவிகள், உபகரணங்கள், பாம்பு கடி மருந்துகள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வரும் 29ம் தேதி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிகமான அளவு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது யாரும் பருவ மழையால் பாதிக்கப்படக் கூடாது என அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அனைத்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும், உயிர் காக்கும் கருவிகள், உபகரணங்கள், பாம்பு கடி மருந்துகள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

click me!