இடி, மின்னலுடன் கூடிய கன மழை... தமிழக மக்களே உஷார்... 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி...

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2020, 1:09 PM IST
Highlights

(18-11-2020) கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். (19-11-2020) லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

குமரி பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (18-11-2020) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் (19-11-2020) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாக கூடுமென்றும் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பரமக்குடி ராமநாதபுரம் 13 சென்டி மீட்டர் மழையும்,   பாபநாசம் (திருநெல்வேலி) 12 சென்டி மீட்டர் மழையும், தேவகோட்டை (சிவகங்கை) கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கொடைக்கானல் (திண்டுக்கல்) அரிமளம் (புதுக்கோட்டை) சிவகாசி (விருதுநகர்) காரைக்குடி தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நன்னிலம் (திருவாரூர்) சிவகிரி (தென்காசி) அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) கூடலூர் (தேனி) திருச்செந்தூர் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குன்னூர் (நீலகிரி) பேரையூர் (மதுரை) தாராபுரம் (திருப்பூர்) அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) மணிமுத்தாறு (திருநெல்வேலி) தல 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

(18-11-2020) கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். (19-11-2020) லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

click me!