அமைச்சர் விஜயபாஸ்கர் 5 வது முறையாக ஆஜர்...!!! - தொடங்கியது விசாரணை...

 
Published : Aug 03, 2017, 06:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
அமைச்சர் விஜயபாஸ்கர் 5 வது முறையாக ஆஜர்...!!! - தொடங்கியது விசாரணை...

சுருக்கம்

Health Minister V Vijayasakar has appeared for the 5th time after the Income Tax Department sent him.

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 5 வது முறையாக ஆஜராகியுள்ளார்.

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்த்து.

அதில், இன்று மாலை நேரில் ஆஜராகுமாறு குறிப்பிட்டிருந்தது. அதன்படி தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கபாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலத்தில் ஆஜரானார்.

PREV
click me!

Recommended Stories

'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?
விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!