கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்! காங்கிரஸ்க்கு டிமிக்கி கொடுத்த நடிகர் அம்பரீஷ்  குமாரசாமியுடன் சந்திப்பு..

First Published May 7, 2018, 5:28 PM IST
Highlights
HD Kumaraswamy MH Ambarish meet Jitters in Mandya Congress


சித்தராமையா அமைச்சரவையில் இருந்த நடிகர் அம்பரீஷ் திடீரென மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியை சந்தித்து கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த கன்னட நடிகரான அம்பரீஷ் எம்.பி.யாக இருந்தார். பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அவரது செயல்பாடு சரியாக இல்லாததால் அவரை அமைச்சர்  பதவியில் இருந்து நீக்கினார் சித்தராமையா. இதனால் அவருக்கு எதிராக நடிகர் அம்பரீஷ் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக சித்தராமையாவை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இல்லிலையில், நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் நடிகர் அம்பரீஷ் போட்டியிட மண்டியா தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். கடந்த சில நாட்களாக தலைமறைவான அவர் மனு தாக்கல் முடிந்த பிறகே வெளியே வந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

இதனால் மண்டியா தொகுதிக்கு வேறு ஒருவர் அறிவிக்கப்பட்டு அவர் மனு தாக்கல் செய்தார். அவர் மண்டியா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்பரீஷை சந்தித்து தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அழைத்தார். ஆனால், அவர் பிரசாரத்துக்கு வர மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியை நடிகர் அம்பரீஷ் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பால் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அம்பரீஷ் திடீரென எஸ்கேப் ஆனதால், மைசூரு மாகாணத்தில் காங்கிரஸின் நிலை என்னவென கேள்விக்குறியாகியுள்ளது.

click me!