உயர்நீதி மன்றத்தில் அசிங்கபட்டும் திருந்தலையா.?? நடிகர் விஜய்யை டார் டாரா கிழித்த இஸ்லாமிய அமைப்பு.

Published : Apr 06, 2022, 01:45 PM IST
உயர்நீதி மன்றத்தில் அசிங்கபட்டும் திருந்தலையா.?? நடிகர் விஜய்யை டார் டாரா கிழித்த இஸ்லாமிய அமைப்பு.

சுருக்கம்

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது இப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக குவைத் நாடு தடை விதித்து உள்ளதாக செய்திகள் வருகிறது. காவியை கிழிப்பது போன்ற காட்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகளில் வைத்து விட்டு இப்போது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் அமைத்து இருப்பது கண்டிக்கதக்கது. 

துப்பாக்கி திரைப்படத்தில் உயர்நீதிமன்றம் மூலம் வாங்கிய செருப்படியை நடிகர் விஜய் மறந்து இருக்க வாய்ப்பில்லை எனவும், பீட்ஸ் திரைப்படமும் துப்பாக்கி திரைப்படம் போல இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக  எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை சுமார் மூன்று முறை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மினி திரையரங்கில் நீதியரசர்கள் ஆர். பானுமதி மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் பார்வையிட்டனர். இது போன்ற மாஸ் ஹிரோ நடிக்கும்  திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பது கண்டிக்கதக்கது. 

திரைப்பட தனிக்கை குழு எப்படி இதுபோன்ற திரைப்படம் எடுக்க அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பினார்கள் நீதியரசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது இப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக குவைத் நாடு தடை விதித்து உள்ளதாக செய்திகள் வருகிறது.காவியை கிழிப்பது போன்ற காட்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகளில் வைத்து விட்டு இப்போது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் அமைத்து இருப்பது கண்டிக்கதக்கது. 

ஏற்கனவே இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக துப்பாக்கி திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்தினோம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இயக்குனர் நடிகர் ஆகியோர் கண்டனத்திற்கு ஆளாகின்றனர் என்பதை மறந்து மீண்டும் முஸ்லிம்களை குறி வைத்து தீவிரவாதிகளாக காட்சிகள் அமைத்து திரைப்படம் எடுத்து உள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

பீட்ஸ் திரைப்படம் வெளியான பிறகு திரைப்படத்தை பார்த்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருந்தால் நடிகர் இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பதும் , விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்தவும் இந்திய தேசிய லீக் கட்சி  தயாராக உள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!