
இப்போது ‘பரூக் அப்துல்லா’ கன்னத்தில் அறையப் போகிறாராம்
பத்மாவதி பட விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மற்றும் இயக்குனர் சஞ்சய் பன்சாலி ஆகியோர் தலையை வெட்டினால் ரூ 10 கோடி பரிசு தரப்படும் என்று அறிவித்த பாரதீய ஜனதா தலைவர் சுராஜ் பால் அமு தனது செய்தித்தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
படத்தால் சர்ச்சை
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிஇயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந் தேதி படம் திரைக்கு வருவது தள்ளிவைக்கப்பட்டது.
தலைக்கு ரூ.10 கோடி
இதற்கிடியை அரியானா மாநில பா.ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுராஜ் பால் அமு சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவர் தனது பேச்சில், “ பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் திரையரங்கு தீ வைத்து கொளுத்தப்படும். தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலாபன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும்’’ என்று அவவ்அறிவித்தார் இது குறித்து குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜினாமா
இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொடரபாளர் பதவியை ராஜினாமா செய்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்குவாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
புறக்கணிப்பு
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கர்னி சேனா உறுப்பினர்களைச் சந்திப்பதை வேண்டுமென்றே புறக்கணித்தார். அவர் நேரம் கொடுத்திருந்தும் அவர் சந்திக்கவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக நான் கட்சிக்காக மிகுந்த ஈடுபட்டுடன் பணியாற்றினேன். ஆனால், உண்மையாக உழைக்கும் பா.ஜனதா தொண்டர்களை முதல்வர் மனோகர் லால் கட்டார் மதிப்பதில்லை. முதல்வரைச் சுற்றி சுயநலமிக்க ஒரு குழு இருக்கிறது. அந்த குழுதான் உண்மைத் தொண்டர்களை முதல்வரிடம் நெருங்கவிடுவதில்லை. இருந்தபோதிலும், நான் தொடர்ந்து ஒரு சாதாரண தொண்டனா பா.ஜனதாவுக்காக தொடர்ந்து உழைப்பேன்.
கன்னில் அறைவேன்
மிகுந்த கனத்த மனதுடன், எனது செய்தித்தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்தேன். அரியானா முதல்வரின் செயல் என்னை மிகுந்த வேதனைப்படுத்தியுள்ளது.
இப்போது என்னுடைய கனவு என்பது டெல்லி லால்சவுக்குக்கு வரும் பரூக்அப்துல்லாவை கன்னத்தில் அறைவதுதான். அவரைச் சந்திப்பேன் என்று சவால்விட்டுளேன்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.