”மணல் விற்பனையில் எந்த முறைகேடும் இல்லை” - விளக்கம் தரும் முதலவர் 

 
Published : Nov 29, 2017, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
”மணல் விற்பனையில் எந்த முறைகேடும் இல்லை” - விளக்கம் தரும் முதலவர் 

சுருக்கம்

There is no abuse in sand sales

மணல் விற்பனையில் எந்த முறைகேடும் இல்லை என்றும் ஆன்லைனில் மணல் விற்பனையில் முறைகேடு நடக்க விடமாட்டோம் என்றும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தனியாரிடம் இருந்த மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. மணல் விற்பனையை முறைப்படுத்த ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் விற்பனை மேற்கொள்வது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து வந்தது. 

இதைதொடர்ந்து மணல் இணைய சேவையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதன்படி தண்ணீர் லாரிகளுக்கு முன்பதிவு செய்வது போன்று மணலுக்கும் பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் குவாரிகளில் முன்பதி செய்துகொள்ளலாம் எனவும் இதன்மூலம நீண்ட வரிசையில் லாரிகளில் காத்திருக்க நேராமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று மணலை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஆளுங்கட்சி பெயரை கூறி ஆன்லைன் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மணல் விற்பனையில் எந்த முறைகேடும் இல்லை என்றும் ஆன்லைனில் மணல் விற்பனையில் முறைகேடு நடக்க விடமாட்டோம் என்றும்  தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!