அடி தூள்... மகிழ்ச்சியான செய்தி மக்களே..!! விரைவில் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 10:17 AM IST
Highlights

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நாட்டில் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு நாட்டு மக்கள் மத்தியில்  புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் 3.53 கோடிப்பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 41 ஆயிரத்துக்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களில் 2.66 லட்சம் பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 76 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு  2.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 66 லட்சம் பேர் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இன்னும் சில வாரங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அஞ்சப்படுகிறது. அந்த அளவிற்கு நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு குறைந்தது 75 ஆயிரம் முதல் 90,000 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வைரசை தடுக்க எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் அதிலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் தவிக்கின்றன. பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே வைரஸை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2021 ஜூலை மாதத்திற்குள் நாட்டில் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன், நியாயமாகவும், அது சமமான அளவிலும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி செய்யப்படும். தடுப்பூசியின் அனைத்து அம்சங்களையும் ஆராய உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பதே தற்போதுள்ள முதல் பணி என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என எதிர் நோக்கி காத்திருக்கும் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!