துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்ட திடீர் ட்வீட்... அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Oct 5, 2020, 9:53 AM IST
Highlights

வரும் 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடந்த அக்கட்சியின் செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற ஆலோசனையில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவு  எடுக்கப்படவில்லை. இதனையடுத்து அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

பின்னர், முதல்வர் பங்குபெறும் நிகழ்ச்சிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். ஆனால், அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் நிகழ்வில் மட்டும் கலந்துகொண்டார். ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதனைத் தொடர்ந்து சொந்த ஊரான தேனிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர், அவரது பண்ணை வீட்டில் பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இதனால், அதிமுகவில் அடுத்தது என்ன நடக்குமோ என்று உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் திடீரென தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே முடிவுகள் இருக்கும் என கூறியுள்ளார். 

தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!

— O Panneerselvam (@OfficeOfOPS)

இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும்  அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என பதிவிட்டுள்ளார்.

click me!