
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் என தொடர்ந்து ஜெவின் தோழி சசிகலாவை நேரில் சென்று சந்தித்து, அவருக்குஆறுதல் கூறி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
மேடை நாடகக் கலைஞர்கள் பிரபல தலைவர்கள் போன்று வேடமிட்டு சசிகலாவை சந்தித்தனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், கழக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தம்மை சந்தித்த மாற்றுத்தினாளிகளின் உருக்கமான வேண்டுகோளை கனிவுடன் கேட்டறிந்த சசிகலா, அவர்களுடன் தரையில் அமர்ந்துவாறு பேசினார். இதனால், மிகவும் நெகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள், சசிகலாவே கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, தங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.