
சுப்ரமணியபுரம் படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக திரையுலகினரின் பிரச்சனைகளை பாஜக தீர்த்து வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரின் சினிமா நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியவர் அசோக்குமார். இவர் சசிகுமாரின் மைத்துனரும்ட கூட.
கம்பெனி புரொடக்சன்ஸ் நிறுவனத்துக்காக மதுரை பைனான்சியர் அன்புசெழியனிடம் இவர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அன்புசெழியனுக்கு பல லட்சம் ரூபாய் வட்டியாக கொடுத்துள்ளனர்.
ஆனால் அன்புசெழியன் தொடர்ந்து கந்துவட்டி கேட்டி மிரட்டி வந்துள்ளார். அசோக்குமாரின் குடும்பத்தினர் குறித்து அன்புசெழியன் தரக்குறைவாக பேசியதாகவும், சசிகுமாரையும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
அன்புசெழியனின் டார்ச்சர் தாங்கமுடியாத அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அசோக்குமார் தற்கொலை தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகினரின் பிரச்சனைகளை தீர்க்க பாஜக தயாராக இருப்பதாகவும் அதில் தமிழிசை தெரிவித்துள்ளார்.