பைரசி ஆப்- ஐ விளம்பரம் செய்த H.ராஜா! அசிங்கபடுத்திய கூகுள்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்...

Published : Sep 11, 2018, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
பைரசி ஆப்- ஐ விளம்பரம் செய்த H.ராஜா!  அசிங்கபடுத்திய கூகுள்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்...

சுருக்கம்

பைரசி அப்ளிகேஷனுக்கு விளம்பரம் செய்த எச்.ராஜா; ஒருவேளை இதுவும் ஹேக்கர்ஸ் வேலையா இருக்குமோ?

பைரசி அப்ளிகேஷனுக்கு விளம்பரம் செய்த எச்.ராஜா; ஒருவேளை இதுவும் ஹேக்கர்ஸ் வேலையா இருக்குமோ?
சர்ச்சையான கருத்துக்கள் தெரிவிப்பதிலும், போஸ்ட்டுகள் போடுவதிலும் பிரபலமானவர் பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா. மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் தருணங்களில், தன் போக்கில் ஒரு டிவிட்டர் கருத்தை தெரிவித்துவிடுவார் இவர். 

அதன் பிறகு எல்லோரும் அவரை திட்டும் போது, இதை நான் செய்யவில்லை . இது என் கருத்தே இல்லை. எல்லாம் அட்மின் செய்த வேலை என கூறி எஸ்கேப் ஆகிவிடுவது இவரின் ஸ்பெஷாலிட்டி. சமீபத்தில் கூட இவர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவு ஒன்று அப்படி தான் வைரல் ஆகி இருக்கிறது. இந்த டிவிட்டர் பதிவில் நல்ல செய்தி என கூறி,  தான் பயன்படுத்தி வரும் வீடியோ டவுண்லோடிங் அப்ளிகேஷனின் லிங்கை பகிர்ந்திருக்கிறார். 

AVD எனும் இந்த அப்ளிகேஷன் ஒரு பைரசி அப்ளிகேஷன். யூ டுயூபில் இருக்கும் வீடியோக்களை இவ்வாறு பிற அப்ளிகேஷன் கொண்டு டவுன்லோட் செய்வது தவறு. அந்த தவறை செய்ய கூடிய பைரசி ஆப் தான் இந்த AVD. இதன் லிங்கை தான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் எச்.ராஜா. இதில் ஹைலைட் என்ன என்றால் அவரின் இந்த டிவீட்டை பார்த்த பிறகு கூகுள் அதன் தளத்தில் இருந்து AVD ஆப்-ஐ நீக்கிவிட்டது. 

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து எச்.ராஜாவும் அந்த டிவிட்டர் பதிவை நீக்கி இருக்கிறார். இப்படி ஒரு அரசியல் தலைவரே பைரஸி அப்ளிகேஷனுக்கு விளம்பரம் செய்யலாமா? என அவரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர் நெட்டிசன்கள். இதற்கும் வழக்கம் போல அந்த அட்மினை தான்  காரணம் என்று பதில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!