இவர்கள் வெட்கம் கெட்டவர்கள்!! நேசமணிய உள்ள இழுத்து விடுறாங்க... வெறித்தனமா தெறிக்கவிடும் ஹெச்.ராஜா!!

By sathish kFirst Published Jun 2, 2019, 12:03 PM IST
Highlights

புரிஞ்சிபோச்சி...  எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெறும் தற்கொலைகளை திசை திருப்பத்தான்  நேசமணி ஹேஷ்டேக் மற்றும் இந்தி எதிர்ப்பா? என வெறித்தனமா தெறிக்கவிட்டுள்ளார் பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 
 

புரிஞ்சிபோச்சி...  எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெறும் தற்கொலைகளை திசை திருப்பத்தான் நேசமணி ஹேஷ்டேக் மற்றும் இந்தி எதிர்ப்பா? என வெறித்தனமா தெறிக்கவிட்டுள்ளார் பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது. மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் "இந்தி" என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும் என ஸ்டாலின் அறிக்கைக்கு ஹெச்.ராஜா ஆவேசமாக ட்வீட் போட்டுள்ளார்.

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருமொழிக்கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி மும்மொழி திட்டத்தை கொண்டு வர நினைக்கக்கூடாது. மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று பாஜக அரசு கனவில் கூட நினைக்க கூடாது. தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக வீர வணக்கம் செலுத்தி வருவதை பாஜக அரசு மறந்து விட்டதோ?

தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்படத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது. அன்னைத்தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு வரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படை நோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை.

மீண்டுமொரு மொழிப்போராட்டத்திற்கு பாஜக அரசு வழி அமைத்து விடாது என இன்னும் நம்புகிறேன். மும்மொழி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கை பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும். இதுகுறித்து கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் இந்த அறிக்கையை சுட்டி காட்டி பிஜேபி தேசிய செயலாளர் எச் ராஜா ட்வீட் போட்டுள்ளார் அதில், அவர் கூறுகையில் புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத போது நேசமணி மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி கூக்குரலிடுவது SRM கல்லூரி தற்கொலைகள் விஷயத்தை திசைதிருப்பவே. முதலில் Sunshine பள்ளியை ஸ்டாலின் இழுத்து மூடட்டும். வெட்கம் கெட்டவர்கள் என தெரிவித்துள்ளார். 

click me!