சிதம்பரம் கதிதான் ஸ்டாலினுக்கும்...!! எச். ராஜா அதிர்ச்சி தகவல்...!!

Published : Sep 04, 2019, 07:30 PM ISTUpdated : Sep 04, 2019, 07:31 PM IST
சிதம்பரம் கதிதான் ஸ்டாலினுக்கும்...!! எச். ராஜா அதிர்ச்சி தகவல்...!!

சுருக்கம்

ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள அதே நிலைதான்  தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகப்போகிறது என்று அவர் எச்சரித்தார் . பாஜக அலுவலகத்தில் நுழைந்த பியூஷ் மனூஷ்-ஐ குண்டர் சண்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.   

சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நிலைதான் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நிலையும் ஆகப்போகிறது என பாஜக தேசியச்செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா அதிரடி கிளப்பியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுகவுக்கும் ,பாஜகவுக்கும் இப்போது ஏழரை பொறுத்தம் என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு திமுகவுக்கும் பாஜகவிற்கும் இடையே எப்போது இல்லாத அளவிற்கு  பனிப்போர் உச்சத்தில் உள்ளது.  ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் சமீபகாலமாக அடிக்கடி அரங்கேறிவருகிறது. திமுக ஓரு அடியென்றால் , பாஜாக பதிலுக்கு இரண்டு அடி குடுக்கும் அளவிற்கு மோதல் உச்சத்தில் உள்ளது. அப்படி திமுகவை தாக்கி பெயரெடுக்கும் பாஜக தலைவரிகளில் மிக முக்கியமானவர் அக் கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா என்றால் அது மிகப்பொருத்தம்.

 

அந்தளவிற்கு  திமுக தலைவராக இருந்தாலும் சரி,  திமுகவின் கூட்டணி கட்சி தலைவராக இருந்தாலும் சரி. எல்லோரையும் அக்குவேராக ஆணிவேராக பிரித்து மேய்வதில் வல்லவர். இந்நிலையில் சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கட்சி தொண்டர்களை சந்தித்துள்ள எச். ராஜா. அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர். தமிழகம் எப்போதுமே ஆன்மீக பூமிதான், இங்கு நாத்தீகவாதிகளுக்கு இடமில்லை என்பதை காஞ்சி அத்திவரதர் நிருபித்துள்ளார். ஆன் மீகத்தை ஊடகமாக பயன்படுத்தி தமிழகத்தில் தேசபக்தி வளர்க்கப்பட்டுள்ளது என்றார்.

பாஜக அலுவலகத்தின் படியேறி  கலவரம் செய்த பியூஷ் மனூஷ் ஒரு அர்பன் என்றும் அவர் ஒரு  நக்சல் எனவும் எச்.ராஜா  கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது.  ரஜினி காந்தின் அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்வி எச்.ராஜா, ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆளுமை. ரஜினியை விமர்சிப்பது அநாகரீகம்,  ரஜினிகாந்த் இன்னும் தன் அரசியல் நிலைபாட்டை தெரிவிக்க வில்லை அதுவரை அவரை பற்றிப் பேசுவது சரியல்ல என்று பதில் அளித்தார்.  

இந்நிலையில் பாஜகவின் திட்டங்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் பொறுத்திருந்த பாருங்கள் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள அதே நிலைதான்  தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரின் நிலையும் ஆகப்போகிறது என்று அவர் எச்சரித்தார் .
பாஜக அலுவலகத்தில் நுழைந்த பியூஷ் மனூஷ்-ஐ குண்டர் சண்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். 

PREV
click me!

Recommended Stories

ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
ஊழல் கறை என் நிழலிலும் படாது.. ஊழல் செய்யவும் விட மாட்டேன்.. மேடையில் சபதம் எடுத்த விஜய்!