திமுக தலைவர்கள் சமச்சீர் பள்ளிகள் நடத்தாதது ஏன்..? சமச்சீர் பள்ளிக்கூடம் நடத்தினால் கொள்ளையடிக்க முடியாதே.. திமுகவை வைச்சு செய்யும் ஹெச். ராஜா!

By Asianet TamilFirst Published Sep 18, 2019, 10:43 PM IST
Highlights

மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியைத் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். இந்தி விவகாரத்தில் அமித் ஷாவின் விளக்கம் திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆளுநர் உறுதியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. 

திமுக தலைவர்கள் ஏன் சமச்சீர் கல்விக் கூடங்கள் நடத்துவதில்லை. சமச்சீர் கல்விக் கூடங்களில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்க முடியாதே என்று திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில்  20- ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பின்பேரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க ஸ்டாலின், போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்.  
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில், “மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியைத் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். இந்தி விவகாரத்தில் அமித் ஷாவின் விளக்கம் திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆளுநர் உறுதியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அமித்ஷாவின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக ஆளுநர் கூறினார். இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம் என்று ஆளுநரிடம் தெரிவித்தேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில் திமுகவை விமர்சித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில், “20-ம் தேதி போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது எதிர்பார்த்துதான். இன்று அமித்ஷா ஜி விளக்கம் அளித்துள்ளதாக கூறுபவர்கள், அவரது முழு பேச்சையும் கேட்காமல் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதை கடந்த 4 நாட்களாக பத்திரிகையாளர் கூட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் நான் பதிவிட்டுள்ளதை நினைவு கூறுகிறேன்.
சி.பி.எஸ்.சி கல்வித்திட்டம் மட்டுமில்லை.  சமச்சீர் கல்வித்திட்டமும் உள்ளது. திமுக தலைவர்கள் ஏன் சமச்சீர் கல்விக் கூடங்கள் நடத்துவதில்லை. சமச்சீர் கல்விக் கூடங்களில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்க முடியாதே அதனால்தான்” என்று ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

click me!