ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து சீமான் ஆவேசம் பேச்சு... ஹெச்.ராஜா தக்க பதிலடி!!

Published : Oct 02, 2022, 05:58 PM IST
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து சீமான் ஆவேசம் பேச்சு... ஹெச்.ராஜா தக்க பதிலடி!!

சுருக்கம்

ஆர்எஸ்எஸ் குறித்த சீமானின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

ஆர்எஸ்எஸ் குறித்த சீமானின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி புத்தகத்தில் அம்பேத்கர் மற்றும் அப்துல் கலாமின் வகுப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய சீமான், அவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது தவறு.

இதையும் படிங்க: தமிழகத்தை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ்.! இங்கு வேலைக்கு ஆகாது... வாலை சுருட்டிக் கொள்ளனும்-இறங்கி அடிக்கும் திருமா

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கோட்பாடுகள் தான் அது. அவர்களுக்கு சாதி, மதம் இரு கண்கள். அதனால் தான் தேசியக் கல்விக் கொள்கையையே எதிர்க்கிறோம். அவர்கள் வர்ணாசிரம கோட்பாடுகள் அவசியம் என்று தெரிவிப்பார்கள். ஆனால் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களின் கொள்கையை பாடமாக வைத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

ஒரு காலம் வரும், தீ வைத்து கொளுத்துவதற்கு, அப்போது கொளுத்துவோம் என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். சீமான் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என்று தெரிவித்திருந்த நிலையில், நீ காணாமல் போய்விடுவாய் என்று சீமானுக்கு ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!