இது அவங்க சதி... பாமகவை பகிரங்கமாக திட்டும் குரு மகன் கனலரசன்...

Published : Feb 01, 2019, 08:28 PM ISTUpdated : Feb 01, 2019, 08:29 PM IST
இது அவங்க சதி... பாமகவை பகிரங்கமாக திட்டும் குரு மகன் கனலரசன்...

சுருக்கம்

காடுவெட்டி குருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வெளியூரிலிருந்து வருபவர்களைத் தடுக்கும் விதத்தில் போலீசார் தடுப்பு அமைத்திருந்ததாக குருவின் மகன் கனலரசு குற்றம் சாட்டியுள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் காலமானார். 

குருவின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம், ராமதாஸ் குடும்பத்தை மட்டுமின்ற சில முக்கிய புள்ளிகளை எதிர்த்தது. இதைச் சகித்துக் கொள்ளமுடியாத பாமகவினர், தங்களுக்கு எதிராக ஊரைத் திசைதிருப்பிவிட்டதாக  பகிரங்கமாக சொல்லிவந்தார் குரு மகன் கனலரசன்.

இந்நிலையில் மறைந்த காடுவெட்டி குருவிற்கு இன்று 58வது பிறந்தநாள் என்பதால் குருவின்  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காடுவெட்டிக்கு சென்று குருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

காடுவெட்டியில் நடப்பது என்ன? முன்னணி இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மாமா வழுவூர் மணிக்குத்தான் 144 தடை போடப்பட்டது.    இதனால் உறவினர்கள் உட்பட எங்களுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். ஆனால் போலீஸார் உங்கள் குடும்பத்தார் தவிர வேறுயாரும் உள்ளே வரக்கூடாது என்று தடுத்துவிட்டனர். 

வெளியூர் பொதுமக்களையும் அப்பா சமாதிக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்த வந்தவர்களையும் அவர்கள் உள்ளே விடவில்லை. போலீஸார் காடுவெட்டி சுற்றி உள்ள அனைத்து வழிகளையும் தடுப்பு போட்டுத் தடுத்துவிட்டார்கள்” என்று கூறினார். இந்த போலீஸாருக்கு உத்தரவிட்டது யார் என்று உங்களுக்கும் தெரியும், ஊராருக்கும் தெரியும் என்று பாமக தலைமையை  நேரடியாகவே விமர்சித்துள்ளார். 

வழுதாவூர் மணி முயற்சியில் இன்று குரு சமாதியில் குரு பெயரில் புதிய வன்னியர் சங்கம் உதயமாகப் போகிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே சபதம் போட்டதால் பாமகவினர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பிரஷர்கொடுத்து இப்படிச் செய்துள்ளார்கள். இப்போது போடப்பட்டுள்ளது என சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!