காலை முதல்வருடன் ஆலோசனை நடத்திய எம்.எல்.ஏ.வுக்கு மாலை கொரோனா... குஜராத்தில் பெரும் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Apr 15, 2020, 12:16 PM IST
Highlights
குஜராத் முதல்வர் தலைமையில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
குஜராத் முதல்வர் தலைமையில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல்வர் விஜய் ரூபாணி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் குணமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா வைரஸால் 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், 26 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் விஜய் ருபானியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவாலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. இம்ரான் ஹிடவாலாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து, முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. ஆகியோர் தன்மை  தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
click me!