கொரோனா அச்சுறுத்தல்... 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குஜராத், மத்திய பிரதேசத்தில் ரத்து..!

By vinoth kumarFirst Published Jun 2, 2021, 7:52 PM IST
Highlights

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. ஜூன் 1-ம் தேதி தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தொற்றுப் பரவல் முழுவதும் குறையாத சூழலில், பிரதமர் மோடி நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் இன்று அறிவித்துள்ளார். அதேபோல், மத்திய பிரதேசத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் மாநிலமாக குஜராத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!