குஜராத், இமாச்சலபிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக !! இமாச்சலை இழந்ததது காங்கிரஸ்! #HimachalResults #GujaratResults

 
Published : Dec 18, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
குஜராத், இமாச்சலபிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக !! இமாச்சலை இழந்ததது காங்கிரஸ்! #HimachalResults #GujaratResults

சுருக்கம்

Gujarat and himachalpradesh BJP come to rule

குஜராத் மாநிலத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில் இதுவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்த இமாச்சலபிரதேசத்தில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அங்கு பாஜக ஆட்சி அமைக்கிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ம் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. 

குஜராத்தில் முதலில் பாஜக முன்னிலையில் இருந்துவந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பாஜக – காங்கிரஸ் இடையே கடும் பேட்டி நிலவி வந்தது.

ஆனால் குஜராத்தில் மீண்டும் பாஜக முன்னிலை பெற்றது. தற்போது அங்கு பாஜக 93 இடங்களிலும், காங்கிரஸ் 84 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இமாசல பிரதேசத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வந்ததது.

அங்கு பாஜக 40  இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24  இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதையடுத்து அங்கும் பாஜகவே ஆட்சி அமைக்கிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!