சசிகலாவுக்கு நாளுக்கு நாள் பெரும் ஆதரவு... ஓபிஎஸ் தொகுதியில் சரியான சம்பவம் செய்த அதிமுகவினர்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2021, 10:39 AM IST
Highlights

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சசிகலாவுக்கு ஆதரவாக சிவகங்கையில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து, சசிகலா கடந்த ஜனவரி 27-ம் தேதியன்று விடுதலையானார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.இந்நிலையில் சசிகலா விடுதலையானதை வரவேற்று அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர் ஓட்டி வருகின்றனர். 

இந்நிலையில் சசிகலா விடுதலையானதை வரவேற்று அதிமுக பிரமுகர்கள் சிலர், தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்தவரிசையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் "எங்கள் குலசாமியே, தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற தீயாகவரும் தியாக தலைவி சின்னம்மா வருக... வருக" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரவேற்பு பேஸ்டர்கள் பெரியகுளம் மட்டுமல்லாது தேனி நகர்ப்பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

அதேபோல், சிவகங்கை மாவட்டம் தேவகேட்டை, கண்ணங்குடி ,சாக்கோட்டை பகுதிகளில் ‘தமிழகத்தின் எதிர்காலமே, துரோகத்தை வென்றெடுக்க வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், எங்களின் ராஜ மாதாவே என சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் போஸ்டர் ஓட்டி வருகின்றனர். தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் ஓட்டி வருவது அதிமுகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!