அரசு பள்ளி ஆசிரியர்களா நீங்கள் ? உங்க பிள்ளைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்கணும் !! அதிரடி காட்டிய முதலமைச்சர் !!

Published : Sep 05, 2019, 08:07 PM IST
அரசு பள்ளி ஆசிரியர்களா நீங்கள் ?  உங்க  பிள்ளைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்கணும் !! அதிரடி காட்டிய முதலமைச்சர் !!

சுருக்கம்

அரசு  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்தான்  சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் வேர்த்து பயிற்றுவிக்கிறார்கள் என பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு எதிராக பொது மக்கள் வைத்த மிகப் பெரிய விமர்சனம் இதுதான்.

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க கட்டதண உத்தரவு போட வேண்டும் என்றும் பொது மக்கள் கரத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. அங்கு நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர்  19 ஆசிரியர்களுக்கு  நல்லாசிரியர் விருதை வழங்கினர். 

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்த விஞ்ஞான யுத்திகளை கற்றுக்கொள்வது அவசியம் என ஆசிரியர் தின விழாவில் பேசியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை