ஜெயலலிதாவின் வலது கரம் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியேறினார் - வெங்கட்ராமனும் விலகினார்?

First Published Feb 3, 2017, 11:54 PM IST
Highlights


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருடன் முதலமைச்சரின் தனிச்செயலாளர் வெங்கட்ராமனும் பதவி விலகியதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய அதிகாரிகளில் முக்கியமானவர் ஷீலாபாலகிருஷ்ணன். 1976 பேட்ச்  ஐஏஎஸ் அதிகாரியான இவர் , துறை செயலாளராக இருந்து பின்னர்  2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் தலைமை செயலாளர் ஆக்கப்பட்டார்.


பின்னர்  2014 ல் ஓய்வு பெற்ற இவரையும் , டிஜிபி ராமானுஜத்தையும் அரசு மற்றும் காவல் துறை ஆலோசகர்களாக நியமித்தார். பின்னர் ராமானுஜம் தகவல் ஆணையரானார். ஷீலா பாலகிருஷ்ணன் முதல்வருக்கு அடுத்து அனைத்துமாக இருந்தார்.


முதல்வர் மறைவுக்கு பின்னர் காணாமல் போன இவர் மீண்டும் கார்டனில் ஐக்கியமானார். அரசின் ஆலோசகராகவே தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியானது. 


இவரை தொடர்ந்து முதல்வரின் தனிச்செயலாளர் வெங்கட்ராமனும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரும் ஜெயலலிதாவால் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட அதிகாரி ஆவார்

முதலவரி செயலாளர் மூன்று என்ற இடத்திலிருந்த வெங்கட்ராமன் , முதல்வரின் தனிச்செயலாளர் 2 ஷீலாப்பிரியாவின்  ஓய்வு , ராம்மோகன் ராவ் தலைமை செயலாளரானதை அடுத்து முதல் இடத்திற்கு வந்தார். 


இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அப்படியே தொடர்ந்தார். இந்நிலையில் அவரும் ரஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைமை செயலகத்தில் வேக வேகமாக நடக்கும் மாற்றங்கள் நாளையும் தொடரலாம் ,  ஓபிஎஸ்சும் மாற்றப்படலாம் என தெரிகிறது.  

click me!