நீட் மசோதா விவகாரம்... ஏப்.28 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகை... அறிவித்தார் கே.எஸ்.அழகிரி!!

By Narendran SFirst Published Apr 20, 2022, 6:09 PM IST
Highlights

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பா் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

Latest Videos

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் கார் மீது எதிர்க்கட்சிகள் கருப்புகொடியுடன் கூடிய கம்புகளை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவே, மயிலாடுதுறை விவகாரத்தில் பாஜக சத்தம் போடுகிறது. ஆளுநரை எதிர்த்து போராடக்கூடாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தின் போது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்துவோம். ஆளுநரை வைத்து தாங்கள் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்தார். 

click me!