சசிகலா மிரட்டுவதாக கவர்னரிடம் ஓ.பி.எஸ் புகார்

 
Published : Feb 09, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சசிகலா மிரட்டுவதாக கவர்னரிடம் ஓ.பி.எஸ் புகார்

சுருக்கம்

தமிழக ஆளுநர் வித்யாகர் ராவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சுமார் 15 நிமிடம் சந்தித்து பேசினார்.  

அவைத்தலைவர் மதுசூதனன், பி.எச் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.  

அப்போது முதலமைச்சர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து ஆளுநரிடம் ஆலோசத்திததாக தெரிகிறது.

மேலும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தன்னை மிரட்டப்பட்டதாகவும்,  தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா சிறை வைத்துள்ளதாகவும் ஆளுநரிடம் பன்னீர்செல்வம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் ஒதுக்குமாறும் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

பதவி ராஜினாமாவை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால்கூட சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கான சூழ்நிலைகள் நிகழ வேண்டுமானால் சசிகலா சிறை வசம் உள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பன்னீர்செல்வம் உள்ளார்.

அதற்கான ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்துகொண்டு வருகிறார் ஓ.பி.எஸ்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!