தூத்துக்குடி சென்றார் ஆளுநர் பன்வாரிலால் - அதிகாரிகளுடன் ஆலோசனை

Asianet News Tamil  
Published : May 29, 2018, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
தூத்துக்குடி சென்றார் ஆளுநர் பன்வாரிலால் - அதிகாரிகளுடன் ஆலோசனை

சுருக்கம்

governor go to thoothukudi

தூத்துகுடியில் ஆளுநர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100வது நாளில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கட்டுப்படுத்த அரசு அவ்ர்கள் மீது துப்பாக்கி சூட்டினை நட்த்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதை ஒட்டி துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

பின் மதியம் சென்னைக்கு சென்ற அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசாணையை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடியுள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் இன்று தூத்துக்குடிக்கு ஆளுநர் பன்வாரிலால் பார்வையிடச் சென்றுள்ளார். பின் அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் ஆட்சியர் சந்தீப் ந்ந்தூரி, மற்றும் எஸ்.பி முரளி ரம்பாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் பின்  அரசு மருத்துவமனை செல்கிறார்.

காயம்பட்டவர்களை பார்க்கும் அமைச்சர்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீட்டிற்கு யாரும் செல்லவில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ள நிலையில் தற்போது அங்கு செல்லும் ஆளுநர் அவர்களை சந்திப்பாரா ? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!