இனியாவது எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள் திராவிடன் ஸ்டாக்குகளே.. திமுகவை வச்சு செய்யும் எச்.ராஜா..!

Published : Feb 04, 2022, 02:29 PM ISTUpdated : Feb 04, 2022, 02:43 PM IST
இனியாவது எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள் திராவிடன் ஸ்டாக்குகளே.. திமுகவை வச்சு செய்யும் எச்.ராஜா..!

சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் நீட் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சரியான, பாராட்டத் தக்க நடவடிக்கை. ஆளுநர் முன்பாக 2 options உண்டு. ஒன்று உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்புவது அல்லது பந்தை ஜனாதிபதி மாளிகைக்கு தள்ளிவிட்டு தன் பெயரை காப்பாற்றிக் கொள்வது.

நீட் விவகாரத்தில் தட்டிக் கழிக்க எண்ணாமல் ஆளுநர் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். 

திமுக ஆட்சி அமைந்தால் நீட்டில் இருந்து விலக்கு பெறப்படும் என  மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  நீட்டிக்கு எதிரான மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் அரசுக்கே திருப்பி அனுப்பினார் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவை தவிர அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- தமிழக சட்டமன்றத்தில் நீட் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேதகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சரியான, பாராட்டத் தக்க நடவடிக்கை. ஆளுநர் முன்பாக 2 options உண்டு. ஒன்று உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்புவது அல்லது பந்தை ஜனாதிபதி மாளிகைக்கு தள்ளிவிட்டு தன் பெயரை காப்பாற்றிக் கொள்வது.

மேதகு ஆளுந‌ர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி மசோதாவை திரும்ப அனுப்பியுள்ளார். இது நேர்மையான, சட்டரீதியிலான செயல். தட்டிக் கழிக்க எண்ணாமல் துணிச்சலாக செய்துள்ளார்.  சட்டம் 2 வகைப்படும். ஒன்று பாராளுமன்றம், அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்படுபவை. மற்றொன்று நீதிமன்றங்களின் தீர்ப்பு. தமிழகத்தில் உச்சமன்ற தீர்ப்பின் மூலம் நீட் செயலாக்கத்தில் உள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தீர்மானம் சட்டப்படி செல்லாது. It is void ab initio. எனவே இனியாவது தமிழக திராவிடியன் ஸ்டாக் அரசு எதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுப்பது மட்டுமே ஒரே வழி என எச்.ராஜா கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!