7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Oct 30, 2020, 3:58 PM IST
Highlights

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு ஒன்றரை மாதம் ஆன நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு ஒன்றரை மாதம் ஆன நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி போராட்டம் மற்றும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த கோரிக்கைகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதால் 3  வாரங்கள் ஆகும் என தெரிவித்திருந்தார். ஆனாலும் ஆளுநருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு உள்ளது.

click me!