பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவிப்பை வெளியிட்டார். இதனால், ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள் ஆகியோர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தனர். தங்களிடம் இருந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் வரிசையில் நின்ற பல பேர் உயிரிழந்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள். கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என்று விமர்சனம் செய்துள்ளார்.