இது எவ்வளவு பெரிய கொடும தெரியுமா? வேதனையின் உச்சத்தில் விஜயகாந்த்

By sathish kFirst Published Aug 11, 2019, 6:53 PM IST
Highlights

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கரூர் அருகே முதலைப்பட்டியை சேர்ந்த வீரமலை அந்த ஊரில் உள்ள சுமார் ஏரி 198 ஏக்கரில் இருந்ததாகவும், தற்போது 39 ஏக்கராக குறைந்திருப்பதையும் கண்டு, குளம் ஆக்கிரமிப்பாளர் யார் என்பதை அறிந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சமூக ஆர்வலரான வீரமலை மற்றும் அவரின் மகன் நல்லதம்பி ஆகிய இருவரையும் நடுரோட்டில் வெட்டி கொடூரமாக கொலை செய்திருப்பது வேதனையாக உள்ளது. இதுபோன்ற கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும்.

இனிமேலும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!