7 தமிழர்களை விடுவித்து உத்தரவு போட அரசுக்கு அதிகாரம் இல்லை... நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அதிரடி!

Published : Feb 12, 2020, 09:53 PM IST
7 தமிழர்களை விடுவித்து உத்தரவு போட அரசுக்கு அதிகாரம் இல்லை... நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அதிரடி!

சுருக்கம்

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்,  ‘7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே. எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்றும் வாதிட்டார்.  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ‘7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே. எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று தமிழக அரசி வழக்கறிஞர் வாதிட்டார்.


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரை விடுதலை செய்ய 2018 செப்டம்பரில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை தமிழக அரசு ஆளுநருக்கும் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவைத்திருக்கிறார். இந்நிலையில் தங்களை விடுதலை செய்ய தீர்மாணம் நிறைவேற்றிய நாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்யக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,  ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்,  ‘7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே. எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்றும் வாதிட்டார்.தையடுத்து, ‘7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி 18ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!