நாளையும் பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு..!

By T BalamurukanFirst Published Nov 25, 2020, 7:10 PM IST
Highlights

நிவர் புயல் எச்சரிக்கையாக நாளையும் அதாவது 26;11.2020 பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

நிவர் புயல் எச்சரிக்கையாக நாளையும் அதாவது 26;11.2020 பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள் நிரம்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் இன்று நண்பகல் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

 இந்த புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை பின்பற்றி புதுச்சேரி மாநிலமும் பொது விடுமுறை அறிவித்தது. இம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பேருந்து, ரயில், விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நீர்நிலைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் நிவர் புயல் எதிரொலியால் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 26) பொது விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

click me!