கருணாநிதியின்  வீட்டில் நள்ளிரவிலும் குவிந்து வரும் தொண்டர்கள்…. இழுத்து மூடப்பட்ட கோபாலபுரம் கேட்….

First Published Jul 27, 2018, 1:40 AM IST
Highlights
Gopalapuram karunanidhi house gate closed


திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிந்தவுடன் கட்டுக்கடங்காத திமுக தொண்டர்கள், நள்ளிரவிலும கோபாலபுரம் இல்லத்தில் குவிந்து வருகின்றனளர். ஆனால் கருணாநிதி ஓய்வெடுப்பதாகவும், தொண்டர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து கோபாலபுரம்  கேட் இழுத்து மூடப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வயது மூப்பு  காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் நள்ளிரவிலும் குவிந்துள்ளனர். அவர்கள் கருணாநிதி வாழ்க என கோஷமிட்டனர். நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆனால் கருணாநிதி ஓய்வெடுப்பதாகவும், தொண்டர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கோபாலபுரம் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது

click me!