கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published : Apr 01, 2022, 10:04 PM IST
கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சுருக்கம்

 கல்யாணராமன் கடந்த அக்டோபர் 16 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அக்டோபர் 23 அன்று பிறப்பித்த உத்தரவுப்படி கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

குண்டர் சட்டத்தில் கைது 

தமிழக பாஜகவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், சமூக ஊடகங்களில் சர்ச்சையாக பதிவுகளை இடுவதாக, அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு உண்டு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு உண்டாக்கும் வகையிலும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கல்யாணராமன் கடந்த அக்டோபர் 16 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அக்டோபர் 23 அன்று பிறப்பித்த உத்தரவுப்படி கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

உயர் நீதிமன்றம் உத்தரவு

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கல்யாணராமன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக அவர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்