நத்தையாரே உங்கள் மின் துறை சாதனையை கூகுளும் சொல்லமாட்டுது... நத்தம் விஸ்வநாதனை பங்கம்செய்த செந்தில் பாலாஜி.!

By Asianet TamilFirst Published Jun 28, 2021, 9:57 PM IST
Highlights

மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்தபோது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.
 

திண்டுக்கலில் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன என்பது மின்துறை அமைச்சருக்கு அத்துறையைப் பற்றி புரிதல் இல்லாததே காரணம். மின்வெட்டை தீர்க்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று வரும். அந்தப் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்தான்.” என்று மின் துறையைப் பற்றியும் திமுக அரசைப் பற்றியும் கிண்டலாக விமர்சித்தார்.


இந்நிலையில் நத்தம் விஸ்வநாதனின் பேட்டிக்கு தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், “மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்தபோது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது. இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், கூகுள் கூட விடை சொல்ல தவிக்கிறது.
2006 - 2011 திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மின் திட்டங்களால்தான் நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் அதிமுக மின் மந்திரிகளின் மின்துறை புரிதல் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். நத்தம் விஸ்வநாதன் கீழ் மின்வெட்டு எப்படி இருந்தது என்பதை என்னைவிட, அவர்களது கூட்டணி கட்சித் தலைவர் ராமதாஸ் நன்றாகவே விளக்கியிருக்கிறார். மின்துறை பற்றி புரிதல் இருக்கட்டும், முதலில் நத்தையார் மின்துறை பற்றி அறிதல் வேண்டும்” செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார். 
 

click me!