குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜானிவாக்கர் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்குமாம்.!

Published : Jul 14, 2020, 11:35 PM IST
குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஜானிவாக்கர் விஸ்கி  இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்குமாம்.!

சுருக்கம்

 உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருப்பது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  

 உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருப்பது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஜானி வாக்கர் விஸ்கி தயாரிப்பு உரிமம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.சூழலியலுக்காக இந்த விஸ்கி நிறுவனம் என்ன முடிவெடுத்திருக்கிறது தெரியுமா?பட மூலாதாரம் சூழலியலுக்கு இணக்கமான இந்த முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்து பார்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில் கிடைக்க, தனது பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. கண்ணாடி பாட்டிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பேப்பர் பாட்டில்களை தயாரிக்க பல்பெக்ஸ் எனும் துணை நிறுவனத்தை டியாஜியோ தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும் என்று தெரிகிறது.200 ஆண்டுகள் பழமையான ஜானிவாக்கர் விஸ்கி நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!