திரும்பி வந்துட போறாங்க - ரிசார்ட்டை மூடி விட்டு ஓட்டம் பிடித்த ஓனர்

 
Published : Feb 18, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
திரும்பி வந்துட போறாங்க - ரிசார்ட்டை மூடி விட்டு ஓட்டம் பிடித்த ஓனர்

சுருக்கம்

கடந்த 11 நாட்களாக கூவத்துரில் இருந்த கோல்டன் பே ரிசார்ட் மக்கள் நடமாட்டத்தால் சிக்கி திணறியது. ஒரு நாளைக்கு 10 அறைகள் கூட புக் ஆகாத சராசரி ரிசார்ட்டாம் இது.

அந்தளவுக்கு ஒன்றும் பெரிய வசதிகள் இல்லாத இந்த சராசரி ரிசார்ட்டில் தான் 11 நாட்களாக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ரூ.3000 முதல் 5000 வரை கட்டணம் வசூலிக்கும் இந்த விடுதிக்கு பெரும்பாலும் விவரம் அறிந்தவர்கள் செல்வதில்லையாம்.அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில் மொத்தமுள்ள 80க்கும் மேற்பட்ட அறைகள் உணவு விடுதிகள் எம்எல்ஏக்கள் மற்றும் உடன் வந்தவர்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போனதாம்.

அது மட்டுமின்றி கொண்டு வந்து குவிக்கப்ட்ட போலீஸ் படை தொடர்ந்து அடுத்தடுத்து விசாரிப்புகள் என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம் அந்த ரிசார்ட்டின் உரிமையாளர்.

இந்த கோல்டன் பே ரிசார்ட்டில் பொதுவாக பெரியளவுக்கு புக்கிங் இருக்காது எனபதால் மிக சிறிய அளவிலான சமையல் அறையையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் அடியாட்கள்  கட்சி நிர்வாகிகள் பி.ஏக்கள் ,டிரைவர்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கி இருந்துள்ளனர் .

மொத்தமாக இருந்த வேலையாட்களால் எம்எல்ஏக்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை சரியான நேரத்துக்கு கொடுக்க முடியாமல் திணறி விட்டார்களாம்.

மொத்தம் விடுதி வாடகை மற்றும் உணவு உள்ளிட்ட இதர செலவுகள் தொடர்பாக 60 லட்சம் ரூபாய் வரை பில் போடப்பட்டுள்ளதாம்.

இதுவரை அதில் பாதி பணம் கூட கொடுக்கபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பல லட்சம் ருபாய் பெறுமானம் உள்ள ஃபாரின் சரக்குகள் பர்மா பஜாரிலிருந்தும் பாண்டிசேரியிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சட்டசபையில் தொடர்ந்து குழப்பான சூழ்நிலை நிலவுவதால் எங்கே மீண்டும் எம்எல்ஏக்கள் வந்துவிடபோகிறார்கள் என்ற அச்சத்தில் அலறி விட்டாராம் அந்த ரிசார்ட் உரிமையாளர்.

அதனால் பராமரிப்பின் கீழ் அந்த ரிசார்ட் மூட்படுகிறது என அறிவிப்பை ஒட்டிவிட்டு ரிசர்டை இழுத்து பூட்டி விட்டார்களாம்.

காரணம் கொடுத்த பில்லுக்கு இரு மடங்கு ரிசார்ட் பொருட்கள் சேதமடைந்துள்ளதாம்.

அரசியல் கூத்துக்கள் ஒருபுறமிருக்க ரிசார்ட் உரிமையாளரின் நிலைமையோ படு மோசமாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு